ஐபக்கம் – 071 : தூங்காதே, அம்மா-அப்பா தூங்காதே…

#ஜூன்17,2024
மதியும் நானும் இன்று மிகச் சோர்வாக இருந்ததால், ‘சீக்கிரம் தூங்கலாம்’ என்று முடிவெடுத்து, அதிசயமாக ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கை போட்டு படுத்துவிட்டோம்.
எப்போதும் கூடாரத்துக்குள் வந்ததும் ஆழ்ந்து உறங்கிவிடும் ஐ, இன்று வேண்டுமென்றே தூங்காமல், அருகில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் இருவரையும் எழுப்பிவிட்டு, அவன் பாட்டுக்கு ஒன்றும் தெரியாதவன் போல அடுத்த நிமிடமே தூங்கிவிட்டான்.
இதில் கொடுமை யாதெனில், எங்கள் இருவருக்குமே சொல்லி வைத்ததுபோல அதன்பிறகு எவ்வளவு முயன்றும் தூக்கம் வராததுதான்.
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து நடுவீட்டுக்கு வந்து உட்கார்ந்து இதோ, ஐ புராணம் பாட… இல்லை இல்லை, பேசத் தொடங்கிவிட்டோம். ஆம்.
”இந்த ஐ இருக்கானே…’’
*