ஐபக்கம் – 061 : முதல் முத்தம்

#மே31,2024

வழக்கம் போல ஐ’யை காலையில் எழுந்ததும் ஞாயிறு தாத்தாவிடம் காட்டுவதற்காகவும், அருகில் இருக்கும் மரங்களை நடந்தவாறு வேடிக்கை பார்ப்பதற்காகவும் வெளியில் தூக்கிப் போயிருந்தேன்.

ஓர் ஐந்து நிமிடம் இருக்கும். எப்போதும் போல அமைதியாக சுற்றுமுற்றும் பார்த்தவன், சட்டென்று மகிழ்ச்சியில் துள்ளியபடி என் கன்னத்தில் தன் பிஞ்சு இதழ்களை மென்மையாகப் பதித்திட்டான். ஆம்!

இதை அவன் தெரிந்து செய்தானா, தெரியாமல் செய்தானா தெரியவில்லை. ஐ பதித்த முதல் முத்தம் என்றே எடுத்துக்கொண்டு, இதோ பூமியில் அமர்ந்தபடி லட்சோப லட்ச அடி உயர வானத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=