ஐபக்கம் – 060 : ஒன்றுக்கு இரண்டு

#மே30,2024

ஒரு பக்கம் ஐ பால் குடிக்கவில்லையே என்று நானும் மதியும் வருத்தப்படுகிறோம். இன்னொரு பக்கம் முதல் தடவையாக இன்று அவன், ‘ப்ப்பூ’ என்று துப்புவது போல செய்யக் கற்றுக்கொண்டான்.

கூடவே, தனது இரு கால்களையும் இரண்டு கைகளால் ஒருசேர பிடித்துவந்து வாயில் வைக்கவும், கால் கட்டை விரலை நன்றாகச் சப்பவும் கற்றுக் கொண்டான். ஆம்!

முன்னதை பேச ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகவும், பின்னதை வளர்ச்சிக்கான முக்கியப் படிநிலையாகவும் செல்வார்கள்.

ஆக, ஒன்றை மறுத்துவிட்டு, இரண்டை கற்றுக் கொண்டிருக்கிறான் ஐ. நாங்கள்தான் இவற்றுக்கு மகிழ்வதா, இல்லையா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=