ஐபக்கம் – 056 : தாய்ப்பால் மகிமை

#மே21,2024

என்னதான் நாம் தெளிவாக இருந்தாலும், சுற்றி இருப்பவர்களில் சிலர், ‘அதப் பண்ணாதீங்க… இதப் பண்ணாதீங்க… அதக் கொடுங்க… இதக் கொடுங்க’ என்று எதையாவது சொல்லிக் குழப்புவதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள்; வைத்திருக்கிறார்கள்.

இதனால் ஆரம்பத்தில் எரிச்சலுற்றவர்கள், இப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் சரி, வெறுமே கேட்டுத் தலையாட்டிவிட்டு, நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையை பார்த்து வருகிறோம்.

அவ்வகையில் ஐ’க்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து, கொடுத்தும் வருகிறோம்.

இதனைப் பார்த்த; கேட்ட சிலர், ‘அப்போ கவிழவும், தவழவும் தாமதமாகுமே… எடை சரியா இருக்காதே’ முதலான அறிவுரைப் பட்டியலை வாசித்து பயமுறுத்தி வந்தார்கள்; வருகிறார்கள். வழக்கம்போல எதற்கும் நாங்கள் செவி சாய்க்கவில்லை.

‘தாய்ப்பாலை விட ஒசந்த ஒன்று இல்லை’ என்பதில் மட்டும் எப்போதும் மிக உறுதியாக இருந்தோம்; இருக்கிறோம். ஆம்!

இதனால் மற்றவர்கள் சொன்னது போல, ஐ கவிழவும்; தவழ ஆரம்பிக்கவும் தாமதம் ஆகவில்லை. எடையும் சரியாகவே இருக்கிறான். அதேபோல, இன்று அடுத்த மைல்கல்லான தன் கையால் தனது காலைப் பிடித்து வாயருகில் கொண்டு போவதையும், வாயில் வைப்பதையும் செய்துவிட்டான்.

விரைவில் நன்றாகத் தவழவும், முட்டிப் போடவும், பிறகு எழுந்து நடக்கவும் செய்வான் என்று நினைக்கிறோம்; நம்புகிறோம். பார்ப்போம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=