ஐபக்கம் – 052 : அன்னையர் தினம்

#மே12,2024
மதிக்கு இது முதல் அன்னையர் தினம். அதனால் இந்த தினத்தில் ஏதாவது சிறப்புப் பரிசு தர வேண்டும் என கடந்த சில நாட்களாகவே ஒரு பரிசை தேடிவருகிறேன். கிடைக்கவில்லை.
ஆதலால், ‘இப்போதைக்கு வாழ்த்து மட்டும் சொல்வோம். பரிசு பிறகு தரலாம்’ என்று முடிவெடுத்து வாழ்த்து கூறினேன்.
இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஐ தூங்கி எழுந்ததும் தெரிந்து சொன்னானோ, தெரியாமல் சொன்னானோ, மதியை பார்த்துச் சிரித்து, ‘அம்மா’ என்றிட்டான்.
ஏற்கனவே பல தடவை சொன்னதுதான் என்றாலும், இன்றைய தினம் அதுவும், எதிர்பாராத தருணத்தில் பரிசு போல அவன் சொன்னது கேட்டு மதி பெரிதாய் மகிழ்ந்திட்டாள். ஆம்!
சீக்கிரமே திட்டமிட்ட பரிசு தந்து, ஐ’யின் இந்தப் பரிசை மிஞ்சிட வேண்டும். இல்லையேல் அடுத்த அன்னையர் தினம் வரைக்கும் மதி இதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றுவாள்.
*