ஐபக்கம் – 045 : மொட்டை மாடி வேடிக்கை

#ஏப்ரல்29,2024
ஐ பிறந்து நேற்றோடு நான்கு மாதம் நிறைவானதால், இன்று மாலை ஐந்தரை மணி இருக்கும். வீட்டு எதிரில் இருக்கும் மாடிக்கு தூக்கிப்போய், தரை சுடாதவாறு படுக்கை போட்டு படுக்க வைத்து, நானும் மதியும் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து கொண்டோம்.
விரிந்திருக்கும் நீல வானையும், அதில் ஆங்காங்கே மிதந்தோடும் வெண் மேகங்களையும், அருகில் இருக்கும் மரங்களையும் ஒருசேரக் கண்டிட்டவன், கை கால்களை வேகமாக அசைத்து பெரிதாய் மகிழ்ந்திட்டான்.
அந்த நிமிடம் மனத்துள் தோன்றியது இதுதான். ‘இனி தினந்தோறும் மாலை என்ன வேலை இருந்தாலும் சரி, ஒதுக்கி வைத்துவிட்டு… ஐ’யை மாடியில் தூக்கிவந்து படுக்க வைத்திட வேண்டும்’ ஆம்.
கண்கள் விரிய, கை கால் உதைத்து மகிழ்ந்து விளையாடி வேடிக்கை பார்த்திட்ட ஐ’யின் சின்ன உள்ளம், அதைத்தான் எங்களிடம் உரைத்திட்டதாய் உணர்கிறோம். ஆம், ஆம்!
*