ஐபக்கம் – 040 : தந்தைபாசம்

#ஏப்ரல்14,2024
இன்று சித்திரை மாதம் முதல் தேதி – தமிழ்ப் புத்தாண்டு என்பதால், மதி தனக்குப் பிடித்த ‘ரூம்பர்ஸ்’ ஆடையை ஐ’க்கு அணிவித்தாள். அது அல்ல விஷயம்.
அவன் கை சப்பக் கூடாது என்று, இரண்டு கைகளையும் அந்த ஆடைக்குள் முழுதாக விட்டு மறைத்துவிட்டாள்.
இதை சற்றும் எதிர்பாராத ஐ, ‘எங்கே தன் விரல்களைக் காணோம்?’ என்று மாறி மாறி தேடிவிட்டு, அழாத குறையாக முழித்துக் கொண்டிருந்தான். பார்க்கவே பாவமாக இருந்தது.
மதியோ, ‘இப்ப எப்படி கை சப்புறன்னு நானும் பாக்கறன்’ என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.
எனக்குதான் மனசு கேட்காமல், அவன் கைகளை உடனே விடுவித்து விட்டேன்.
தந்தை பாசம் என்பது இதுதானோ, என்னவோ!
*