ஐபக்கம் – 029 : ஒள’வை எழுப்பிய ஐ

#மார்ச்21,2024

இரண்டாவது பதிவு : எழுதி முடித்து சாப்பிட்டுவிட்டு, மணி இரண்டரை இருக்கும். ஐ அருகில் சென்று படுத்து சற்று நேரத்திலேயே உறங்கிவிட்டேன்.

ஓர் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன். யாரோ, ‘ஒள… ஒள…’ என்று கூப்பிட்டும்; தொட்டும் எழுப்புவது கேட்டு; உணர்ந்து கண் விழித்துப் பார்த்தேன். ஐ புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

”ஓ, நீதான் அப்பாவ எழுப்புனதா.. மகனே?’’ என்று கேட்டேன்.

உடனே, பொக்கை வாய் காட்டிச் சிரித்து, ”ஒள… ஒள…’’ என்று கை கால்களை வேகமாக ஆட்டிட்டான்.

எட்டி அவன் நெற்றியில் அரை டஜன் முத்தமிட்டு, கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு எழுந்தேன். மதி தனது நகர்பேசியை நீட்டி, அதிலுள்ள காணொளியை பார்க்கச் சொன்னாள்.

‘என்னவா இருக்கும்?’ எனும் கேள்வியோடு வாங்கிப் பார்த்தேன். ஐ சுமார் ஐந்து நிமிடமாக என்னை எழுப்பினதை அத்தனை அழகாக படம் பிடித்திருந்தாள். ஆம்!

மகிழ்வோடு புன்னகைத்துவிட்டு, மீண்டும் ஒருதடவை கண்ணூறு பாடலை மனத்துள் பாடிக்கொண்டு போய் குளித்துக் கிளம்பினேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=