ஐபக்கம் – 030 : முதல் தொலை பேச்சு

#மார்ச்21,2024

மூன்றாவது குறிப்பு : சென்னை – வடபழனியில் உள்ள அண்ணன் ஒருவரை பார்க்கப் போயிருந்தேன். அவரை பார்த்து பேசிவிட்டுக் கிளம்ப மூன்று மணி நேரத்துக்கு மேலானது. அவ்வளவு நேரம் என்னைக் காணாது ஐ அங்கும் இங்கும் தேடியதாக அழைத்து சொன்ன மதி, ”நான் லவ்ட் ஸ்பீக்கர்ல போடுறன். பேசுங்க’’ என்றாள்.

‘இரண்டரை மாதக் குழந்தை எப்படி பேசுவான்?’ என்றெல்லாம் எண்ணவில்லை. உடனே அங்கிருந்த தெருவுக்குள் நுழைந்து நடந்துகொண்டு, ”ஐ, பாப்பா… என் தங்கமே… வைரமே… என்ன பண்ற, சாமி…? அப்பாவ காணோம்னு தேடுனியா, தங்கம்? இதோ, கொஞ்ச நேரத்துல வந்துடறன்… சாமி. அதுவரைக்கும் நாம… ‘ஒள…’ விளையாடலாமா…?’’ என்றுவிட்டு ”ஒள… ஒள…” என்றேன்.

பதிலுக்கு மறுமுனையில் ஐ சிரித்து, ”ஒள… ஒள…” என்றுவிட்டு, தனக்குத் தெரிந்த மொழியில் ஏதேதோ பேசிட்டான்.

ஒரு மூன்று நிமிடம் இருக்கும். இப்படியே பேசிச் சிரித்து விளையாடிட்டோம். ஆம்!

ஐயும் நானும் முதல் தடவை இன்று நகர்பேசி வழியாக பேசிக்கொண்டோம். அதுவும், பல்லாவரத்தில் இருப்பவனிடம் [பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும்] வடபழனியில் இருந்துகொண்டு.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=