ஐபக்கம் – 016 : தன் பெயர் சொன்ன ஐ

#பிப்ரவரி06,2024

ஐ பிறந்த அன்று எப்படி சற்றும் எதிர்பாராத வகையில் ‘அம்மா’ என்றானோ, அதேபோல 36 ஆவது நாள் அதாவது, பிப்ரவரி ஒன்றாம் தேதி, ‘ஏய்’ என்றான் (அதுவும் தன் அம்மாவை பார்த்து). ஒருவேளை தன் பெயரைதான் ஆங்கிலத்தில் (Ai) சொல்கிறானோ என நினைத்து சிரித்திட்டோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அடுத்த ஐந்தாவது நாளான இன்று, தனது பெயரை நன்கு புரிவது போல ‘ஐ’ என்று அத்துனை அழகாக தமிழிலேயே சொல்லிவிட்டதுதான்.

ஆக, தன் பெயரை ஆங்கிலத்திலும் சொல்லிவிட்டான், தமிழிலும் சொல்லிவிட்டான். நாளை வளர்ந்து என்னென்ன மொழிகளில் எல்லாம் சொல்லப் போகிறானோ; எழுதப்போகிறானோ, தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=