இருந்தும்
என்னை விரும்பித் தொலைத்துவிட்டு
என்னைத்தேடி
என் நான் மட்டும் துணைவர
ஏகிறேன்
இதயவுள்நுழைந்து
குருதித்துளி படரக்காண்கிறேன்
வேண்டி வருத்தி
விரல்நுனி துண்டித்து
விடியல்வரை விழித்திருந்து
திரும்புகிறேன்
எனக்குள் யாரையோ புகுத்திவிட்டு
இப்போது
என்னை விரும்பித் தொலைத்துவிட்டு
எனக்குப் பதிலாக யாரையோதேடி
என் நான் மட்டும் துணைவர
ஏகியபோது
இல்லாமல் போயிருந்தேன்
இருந்தும்
இருந்தும்
இருந்தும்