அவனவள்

ஆணாகிக் கொண்டிருக்கும் அவளை
ரசிப்பின் குன்றுமேல் சந்தித்து
மதுக்கோப்பை நீட்டினேன்
மலர்க்கொத்தை எளிதில் பிடுங்கி

மை டப்பா எடுத்துவீசி
சிகரெட் பெட்டி வைத்ததை
உள்ளூர விரும்பினாள்

எதிர்படும் யாவரும்
குறுஞ்சட்டையின் பயனில்
திளைத்ததை
எதிர்பார்த்ததாய் காட்டிக்கொண்டாள்

லைக்கிலும் ஷேரிலும் எகிறிய
பிரபல அந்தஸ்தை
பெருமிதத்துடன் தூக்கிக்கொண்டு
வீடேகி ஆடிமுன் நிற்க

தனக்குப் பதிலாக
வேறொருவரிருக்க
அதிர்ந்துடைந்து
அழுதாள்
அவளுக்கும் கேட்காதபடி

மிக மிக மெல்லமாய்
மெல்லமாய்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=