இன்மை

மானசீக ஒதுக்குதல்கள் யாதுமற்ற
பிரிவில் உழல்கையில்
சொற்களில் சிக்கிக்கொள்ளும் மனதை
இனிப்பு தடவிய சமாதானங்கள்
எதுவுமற்று
ஏரியின் கோடி நீராய்
போகுமிடமறியாத சுவாரசியத்தோடு
பெரும்பள்ளத்தில் பாய
கசாப்புக்கடை வெள்ளாட்டுக் கண்ணால்
வெறித்துப்போனது
கடைசிதடவை பார்க்கும் முகங்கள்
இம்சித்தலிலிருந்து மீளல்
கருவறையேகும் வெற்றாசையென அறிய
எதுவுமற்று இன்மையானேன்
இன்மையாகி
இன்மையாகி
இன்மையாகி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=