உரு

எனக்கே எனக்கான குரலை
எனக்கே எனக்கான பொம்மை போட்ட பென்சிலில்
எனக்கே எனக்கான சானித் தாளில்
எனக்கே எனக்கான முறையில்
அழித்தழித்து
வரைந்து வரைந்து
முடித்தபோது ஒருவழியாக
எனக்கே எனக்கான மேசையில்
எனக்கே எனக்கான அறையில்
எனக்கே எனக்கான சாலையில்
எனக்கே எனக்கான நடையில்
நடக்கப் பார்த்து
உருமாறிப்போனேன்
உருவிலிருந்து குரலுக்கு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=