அண்டம்


சொட்டி சொட்டிப் பேசும் சிறுமியை
பார்த்திருக்கிறேன்
அப்போது ஒரு தடவை

விட்டு விட்டு நடக்கும் நதியை
பார்க்கவேண்டும்
என்றாவது ஒரு நாளில்

இன்மையில் தொலையும் உலகை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இப்போது நாள் முழுக்க

அன்பின் நீர்மைசூழ்
ஆக்க அழித்தலில்
புலம்பி சுழல்கிறது
பெயரிடாத அண்டமொன்று

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=