மகனுக்கு ‘ஐ’ எனப் பெயரிட்டிருக்கிறோம்.. 💚

~

‘ஐ’ என்னும் ஓரெழுத்து தமிழ்ச் சொல்லுக்கு (ஆங்கிலத்தில் AI), வியப்பானவன், அழகானவன், மென்மையானவன், நுண்மையானவன், இனிமையானவன், தலைவன், அரசன், ஆசான்… எனப் பல பொருள்கள் உண்டு.

உலகில் இதுவரை யாராவது தம் பிள்ளைக்கு இத்தனைச் சிறிய பெயரை (தமிழில் ஓரெழுத்து; ஆங்கிலத்தில் ஈரெழுத்து) வைத்திருப்பார்களா தெரியாது. நாங்கள் வைத்திருக்கிறோம். அதோடு, இதைவிட அதிக அர்த்தங்கள் பொதிந்த, யாவரையும் நொடியில் வியத்தவல்ல, இன்னோர் அழகான பெயர் இருக்க முடியாது என்பது மட்டும் உறுதி.

இத்தனை மகத்துவம் வாய்ந்த அரிய பெயரை எங்கள் மகனுக்கு சூட்டியிருப்பதை இந்தத் தை திருநாளில் உங்களோடு பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.

~

வடிவரசு – கோமதி.

~

மகன் பிறந்திருக்கிறான்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=