சொல்லன்றி எதுவுமற்றவன்! – 343
சென்றாண்டு கர்நாடகாவில் ஹம்பி, லெபாக்ஷி, கோலார் வட இந்தியாவில் காசி, சாரநாத், அலகாபாத், அயோத்தி போன்ற பல இடங்களுக்குப் பயணித்தீர்கள். இந்தாண்டோ சிருங்கேரி, ஹலபேடு, பேலூர், கொல்லூர், ஹொரநாடு, தர்மஸ்தலா… என்று கர்நாடகாவின் இன்னொரு பக்கம் வந்திருக்கிறீர்கள். அடுத்தாண்டு எங்கே பயணிப்பதாக திட்டம்?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தெரியவில்லை. இருந்தாலும் என் பயணத் திட்டத்தில் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோயிலையும், இமயமலையையும் (அதிலும் குறிப்பாக கையிலாயம்) வைத்திருக்கிறேன். அது அவ்வளவு எளிதில் சாத்தியப்படுமா தெரியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
இன்னும் தமிழ்நாட்டிலும், இந்தியா முழுக்கவும் பார்க்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. முடிந்தவரை அவற்றில் குறிப்பிட்ட சிறு பகுதியையாவது இந்தச் சின்னஞ்சிறிய வாழ்வில் பார்த்துவிட வேண்டும். அவ்வளவுதான்.
[இன்னும்]
*