சொல்லன்றி எதுவுமற்றவன்! – 342
தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் நீங்கள், இப்போது கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் புகழ்பெற்ற துங்கா நதிக்கரையில் இருக்கிறீர்கள். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு (சுற்றுலா தலங்களை தவிர்த்துவிட்டு) மட்டுமே பயணிக்க என்ன காரணம்?
இச்சின்னஞ்சிறிய வாழ்க்கையில் கிடைத்தற்கரிய இவ்வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்திடவே, எனக்கான படைப்புகளை செவ்வனே படைத்து, எனக்கு வேண்டிய நூல்களை தேர்ந்தெடுத்து வாசித்து, தேவையற்ற கேளிக்கைகளை அறவே தவிர்த்து, சுற்றுலா தலங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்த்துவருகிறேன்.
[இன்னும்]
*