சொல்லன்றி எதுவுமற்றவன்! – 338
சமீப ஆண்டுகளில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் மீது அதீத ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே? உங்கள் படைப்புகளை வைத்தே கேட்கிறேன், என்ன காரணம்?
ஹாஹா… (மென் சத்தத்தில் சிரித்தவர்) ஆமாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது, எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு நடுகல். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய நடுகற்களில் மிக முக்கியமான ஒன்றாக இதனைச் சொல்வார்கள். காரணம், இந்நடுகல் வீர மரணம் அடைந்த வீரனுக்கு மட்டும் எடுக்காமல், அவனோடு மாண்ட கோவிவன் என்னும் நாய்க்கும் சேர்த்து எடுத்திருப்பார்கள். இதுகுறித்து தாவர சங்கமத்தில் எழுதி இருப்பேன்.
நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்வை, விட்டுச் சென்ற எச்சங்கள் மூலமாக அறிந்துகொள்ள தொல்லியலும், கல்வெட்டியலும் பெரிதும் உதவக்கூடியது. அதனால்தான் அவற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன். அதற்காக கடந்த ஓராண்டாக சென்னை – தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒரு பட்டயப் படிப்புகூட படித்துவருகிறேன்.
[இன்னும்]
*