சொல்லன்றி எதுவுமற்றவன்! – 318
இன்றைய இளம் படைப்பாளர்களுள் தொடர்ந்து படைப்பூக்கத்தோடு இயங்குபவர் நீங்கள். உங்கள் சமகால எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?
தொடர்ந்து பலரை கவனித்து வருகிறேன். அவர்களில் சிலர் நன்றாக எழுதுகிறார்கள். இன்னும் சிலர் எழுதுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். மிகுதியானவர்கள் ஒரு படைப்பாளர் எப்படி இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார்கள்.
அதாவது, எப்படியாவது, யார் காலில் விழுந்தாவது, கெஞ்சிக் கூத்தாடியாவது, ஆள் பிடித்தாவது, தம் படைப்பை பிரபலமாக்கவும், அதன் மூலம் விருதுகளும், அங்கீகாரமும் பெறவும், அதனால் பிறகு ஆதாயம் அடையவும் அத்தனை பிரயத்தனப்படுகிறார்கள்.
இதெல்லாம் ஒரு படைப்பாளி செய்யக்கூடிய செயலா? என ஒருபோதும் அவர்கள் நினைப்பதில்லை. அவர்களையெல்லாம் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. வேறு என்ன சொல்ல?
[இன்னும்]
*