சொல்லன்றி எதுவுமற்றவன்! – 309

இப்படியெல்லாமா செய்தார்கள்? கேட்கவே சங்கடமாக இருக்கிறது. எனினும், பதிப்பகங்களும், அவற்றின் தயவும் இல்லாமல் எப்படி உங்கள் நூல்களை வாசகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறீர்கள்?

கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நல்ல வாசகர்கள் தகுதியானப் படைப்புகளை எப்படியாவது தேடி அடைவார்கள் என்னும் நம்பிக்கையால், கிடைக்கும் ஒன்று இரண்டு வழிகளில் எல்லாம் கொண்டுபோய் சேர்க்கிறோம்.

பெரும்பாலான வாசகர்கள், வாசித்தவர்கள் சொல்லக் கேட்டு தேடி வந்து கேட்கிறார்கள். இதையெல்லாம் நல்ல ஆரோக்கியமான செயலாகவே பார்க்கிறேன். இன்னும் வரும்காலங்களில் எல்லா இடங்களிலும்; வழிகளிலும் எளிதில் கிடைப்பதுபோல நூல்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 308

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=