சொல்லன்றி எதுவுமற்றவன்! – 243
ஆனால், இன்றிருக்கும் இளம் தலைமுறையினருக்கு அவர்களது குடும்ப, குல தெய்வங்களே தெரிவதில்லையே?
ஆமாம். இதற்கு அவர்களை எந்தவிதத்திலும் குற்றம் சொல்லமுடியாது. எல்லாம் அவர்களது பெற்றோர்களைத்தான் சொல்லவேண்டும்.
தம் குழந்தைக்கு சினிமா நடிகர்களை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்கள் பலர், தம் முன்னோர்களான வாழ்ந்து மறைந்து தெய்வமான குடும்ப, குல தெய்வங்களை அறிமுகம் செய்வதை ஏதோ கெளரவக் குறைச்சலாகப் பார்க்கிறார்கள்.
கேட்டால், ‘ஆடு, கோழி, பன்றியையெல்லாம் வெட்டி வழிபடும் தெய்வத்தைப் போய் எதுக்குங்க குழந்தைங்களுக்கு அறிமுகம் செய்யணும்?’ என்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. அதனால், அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று விட்டுவிடவேண்டும்.
என் ஐயா, அம்மா கனவில் பலதடவை, அதுவும் மிக முக்கியமான தருணங்களில் எல்லாம், எங்கள் குடும்ப தெய்வமும், குல தெய்வமும் வந்து சிலவற்றை உணர்த்தி எங்களையெல்லாம் காத்திருக்கிறது; வழிநடத்தி இருக்கிறது. இதன் மகத்துவமெல்லாம் அவரவர்களாக உணர்ந்தால்தான் உண்டு.
[இன்னும்]
*