சொல்லின்றி எதுவுமற்றவன்! – 219
அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டு, இணைய இதழ்கள் இப்போது அதிகமாக வரத் தொடங்கிவிட்டதே?
ஆமாம். இனி இப்படித்தான் உலகம் எண்ணும்போது அதற்கு ஏற்பத்தான் எல்லாம் மாறும். இணைய இதழ்கள் மட்டுமல்ல. இனி வரும் காலங்களில் எப்படி சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் தனிக்கணக்கு வைத்திருக்கிறார்களோ, அதேபோல தமக்கென ஒரு வலைதளம் வைத்திருக்கும் அளவுக்கும் ஆகும்.
தொழில்நுட்பம் என்பது இன்றை வென்று நாளை நோக்கிப் போகக்கூடியது. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த ஆர்குட் இன்றைக்கு இல்லை. இன்றிருக்கும் முகநூல் அடுத்த பத்தாண்டுகளில் இருக்குமா தெரியாது. இவற்றில் அந்தந்த நேரத்துக்குத் தேவையான நமக்கானதை தேர்ந்தெடுத்து அதில் நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அவ்வளவுதான்.
[இன்னும்]
*