சொல்லின்றி எதுவுமற்றவன்! – 218

இந்த அளவுக்கு இணையத்தையும், தொழில்நுட்பத்தையும் மெச்சிப் பேச நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியல்தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

(சட்டென எதுவும் சொல்லாமல் சத்தமாகச் சிரித்தவர், சிலநொடி மெளனத்திற்குப் பின் தனக்குள் எதையோ யோசித்துவிட்டு)

இன்னும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். காசா, பணமா?

காலத்துக்கு ஏற்ப புதிது புதிதாக வரக்கூடிய தொழில்நுட்பங்களுக்கு தக்கபடி தம்மை தகவமைத்துக்கொள்ளாத யாரும் இங்கே ஒரு படி கீழேதான் இருப்பர்; இருந்தாகவேண்டும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள். முன்பெல்லாம் இதழ்களுக்கு கட்டுரையோ, கதையோ அனுப்ப வேண்டுமென்றால், தாள்களில் கைப்பட எழுதி தபாலில் அனுப்பினால் போதும். அதை அலுவலகத்தில் இருக்கும் தட்டச்சு செய்பவர்கள் தட்டச்சு செய்து தருவார்கள். பின் அதை இதழில் பயன்படுத்துவார்கள்.  

ஆனால் இப்போது எந்த அலுவலகத்திலும் தட்டச்சு செய்பவர்கள் கிடையாது. அதனால் வேறு வழியே இல்லை. நாமே தட்டச்சு செய்து அல்லது தட்டச்சு செய்யும் இடத்தில் கொடுத்து தட்டச்சு செய்து தரச் சொல்லி மின்னஞ்சல் வழியாக அனுப்பியாக வேண்டும். இல்லை என்றால் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்கள்; நடத்துவார்கள்.

சற்று முன்னால் சொன்ன பத்திரிகையாளரையே இதற்கும் உதாரணமாகச் சொல்லலாம். அவர் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஆனாலும் தொழில்நுட்பத்துக்குப் பழகாததால் ஒவ்வோர் இடத்திலும் சிறுமைப்பட்டு நிற்கவேண்டி இருக்கிறது. அவரை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவர்கள் எல்லாம் அவரைத் தாண்டி உயர் பொறுப்புகளுக்குச் செல்கிறார்கள். அவர் இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறார்.

இங்கு மட்டுமல்ல. உலகம் முழுக்கவும் இதுதான் நிலைமை. இதனைச் சொல்ல கணிப்பொறி அறிவியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில்நுட்ப உலகில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் ஓரளவு தெரிந்திருந்தாலே போதும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 217

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=