சொல்லின்றி எதுவுமற்றவன்! – 217

சரியாகச் சொன்னீர்கள். இந்த இடத்தில் இன்னொரு கேள்வி. தொழில்நுட்பத்துடன் தங்களை எளிதில் இணைத்துக்கொள்ள முடியாததற்கு தலைமுறை இடைவெளிதான் காரணமா?

நிச்சயமாக இல்லை. முந்தைய கேள்விக்கு சொன்ன அதே பதிலையேதான் இதற்கும் சொல்வேன். மனம்தான் காரணம்.

சமீப காலங்களில் இணையத்தில் அதிகம் எழுதிய தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இப்போது 61 வயதாகிறது. கிட்டத்தட்ட அவர் வயதை ஒத்த எனக்குத் தெரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இணையம், கணினி என்றாலே பயந்து ஓடிவிடுவார். கணினியில் ஒரு வரி கூட எழுதத் தெரியாது. பல தடவை பல்வேறு இடங்களில் அதற்காக அவமானப்பட்டிருக்கிறார். இந்த ஒரு காரணத்தாலேயே பெரும் பொறுப்புகளுக்கு உயர்த்தப்படாமல் தொடர்ந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார். அதையெல்லாம் அவர் என்னிடம் சொல்லி வருந்தும்போதெல்லாம், ‘இதெல்லாம் ஒண்ணுமே இல்ல சார். ரொம்ப சுலபம்தான். வாங்க நான் சொல்லித் தர்றேன். கத்துக்கலாம்.’ என்று என் நேரத்தை ஒதுக்கி, ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு சொல்வது போல சொல்லித் தருவேன். ஒருநாள், இரண்டுநாள் பயிற்சி எடுப்பார். அதற்கு அடுத்தநாளே நிறுத்திவிடுவார். தனக்குள் ‘கடைசிவரை தனக்கு அது வரவே வராது’ என்று நினைத்துக் கொண்டிருப்பார்.

எதையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள வேண்டும், அதில் தம்மை இணைத்து, ‘அது என்னதான் பார்த்துவிடுவோமே’ என எண்ணி, அதற்கேற்ப தம்மை வடிவமைத்துக்கொள்ள முயலும் மனம் வராததுதான் உண்மையானக் காரணம். இதற்கு தலைமுறை இடைவெளி காரணம் என்பதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 216

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=