சொல்லின்றி எதுவுமற்றவன்! – 215
தமிழில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற பல முன்னோடி எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக இணையத்தில் இயங்கி வருகிறார்கள். அவர்களில் யார் இணையத்தை சரியாகப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்கள்?
மூவரும்தான் என்றாலும், ஜெயமோகனே அவர்களில் என்பொருத்தவரை முதலாவதாகச் சொல்வேன். தமிழில் எழுதக்கூடிய ஓர் எழுத்தாளரின் எழுத்து இன்றைக்கு உலகம் முழுக்க இத்தனை ஆயிரம் பேர்களால் வாசிக்கச் செய்ததோடு, அவர்களது எழுத்துக்களையும் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து ஓர் இணைய இதழ் அளவுக்கு மாற்றி இருக்கிறார்.
அதேநேரம் சாருவும், எஸ்.ராவும் தம் அளவுக்கு அவர்கள் சரியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். என் போன்ற இளம் படைப்பாளிகள் இவர்களிடத்திலிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. அவற்றில் இணையத்தையும், தொடர்ச்சியாக அதில் இயங்கும் அவர்களது ஆர்வத்தையும்; உழைப்பையும் மிக முக்கியமாகப் பார்க்கிறேன்.
[இன்னும்]
*