சொல்லின்றி எதுவுமற்றவன்! – 193
‘சிறார் படைப்புகள் தமிழில் அதிகம் வருவதில்லை’ என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்நூல் மூலம் ஒரு சிறார் எழுத்தாளராக அறிமுகமாகி இருக்கிறீர்கள். இந்நிலையில் இக்குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்படியெல்லாம் ஒரேயடியாக ‘வருவதில்லை’ என்று சொல்லமுடியாது. அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவை சிறார்களுக்கான படைப்பாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
நான் வாசித்தவரையில் அதிகமானவற்றில் ஒரு மேதைத்தனம் அதாவது, எழுதுபவர்கள் தம் மேதைமையை காட்டும் தனம் இருப்பதை பார்க்கமுடியும். அதேபோல, குழந்தைகளை முட்டாள்களாய் எண்ணி அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் தொணியில் இருப்பதையும் பார்க்கலாம். இவை இரண்டும் நிச்சயம் வாசிக்கும் சிறார்களுக்கு ஓர் ஒவ்வாமையை; விலகலை தரும் என்பதே என் எண்ணம்.
முடிந்தவரை இவ்வொவ்வாமை இல்லாத சிறார் படைப்புகளை தரவேண்டும் என்று நினைப்பேன். அதன் ஒரு வெளிப்பாடாகவே எனது இந்த நாவலை பார்க்கலாம்.
[இன்னும்]
*