சொல்லின்றி எதுவுமற்றவன்! – 174
அதேபோல நாவலில் பெரிதும் ஆச்சர்யப்படுத்திய இன்னொரு பாத்திரம் செவடன். இப்படி ஒருவர் உண்மையில் முத்துசாமிக் கவுண்டரோடு (அதாவது, ஐயாவோடு) இருந்தாரா?
நல்லக் கேள்வி. ஒரு நேர்காணல் வெற்றிகரமாக நிகழ அதில் இடம்பெறும் கேள்விகள் மிக முக்கியம். தொடர்ந்து நல்ல நல்லக் கேள்விகளை கேட்டு வருகிறீர்கள். நன்றி.
உங்களது இந்தக் கேள்விக்கு, ‘இல்லை’, ‘ஆமாம்’ என்று இரண்டு பதில்களை சொல்வேன். ஏனென்றால், உண்மையில் செவடன் என ஒருவர் முத்துசாமிக் கவுண்டருடன் (அதாவது, ஐயாவுடன். ஹாஹா…) இல்லை. ஆனால், அவரைப் போன்ற சிலர் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒற்றைப் பாத்திரமாக எண்ணி உருவாக்கியதுதான் செவடன்.
[இன்னும்]
*