தார்பாய்

நெல் உள்ளிட்ட தானியங்களையும், சமயங்களில் வீட்டையும் (அதுவும் குடிசை, கூரை மற்றும் ஓட்டு வீடுகள்), இதர முக்கியப் பொருட்களையும் வெயில் மற்றும் மழைகளில் இருந்து மூடிப் பாதுகாத்திட பயன்படும் (அகலமான, உறுதியான) பாய் வகை.
[தார்பாய் = தாருபாய்]
– மழ வரமாரி கீது பாரு… போயி தார்பாயி எடுத்தாந்து நெல்லு மூட்டைய நல்லா மூடிவுடு.
– காலில ஏன்ச்சதும் மொத வேலயா தார்பாயி வாங்கியாந்து கூரமேல போட்டுவுடணும்.
*