சொல்லின்றி எதுவுமற்றவன்! – 152
அருமை. நிச்சயம் எழுதுங்கள். அதற்கு என் வாழ்த்துகள். இனி உங்கள் அடுத்த நூலான ‘ஐயன் சொல்’ பற்றி பேசுவோம். அதென்ன ‘ஐயன்_Sol தனயன்_Click’?

(மெல்லிதாக இதழ் அசைத்து சிரித்துவிட்டு, தன் கையில் வைத்திருந்த நகர்பேசியில் எதிரில் பூத்துக் குலுங்கிய சரக்கொன்றை மரத்தை நான்கைந்து ஒளிப்படங்கள் எடுத்துவிட்டு)
சிறு வயது முதல் ஐயா என்னிடம் எத்தனையோ விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவற்றில் கிட்டத்தட்ட அனைத்திலும் அவரது முதிர்ந்த அனுபவம் கலந்திருக்கும். அதோடு, பெரும் பொருளும் பொதிந்திருக்கும். அப்படி அவர் சொன்னவற்றிலிருந்து நூறு விஷயங்களை எழுதி, ஒவ்வொன்றுக்கும் ஓர் ஒளிப்படமாக நான் அவ்வப்போது எனது நகர்பேசியில் சொடுக்கியவற்றுடன் சேர்த்து நூலாக்கினேன். அதுதான் இந்த ‘ஐயன்_Sol தனயன்_Click’.
[இன்னும்]
*