சொல்லின்றி எதுவுமற்றவன்! – 138

நிலைத்திணை’ பெரும் உழைப்பை தந்து எழுதிய நூல் என்பதை ஒருதடவை புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்நூல் உருவான நாட்கள் பற்றி சொல்லுங்கள்…

முதல் கட்டுரை எழுதுவதற்கு முன்னால் வடிவம் குறித்து பலவாறு யோசித்தேன். இதுவரைக்கும் மரங்கள் பற்றி எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபட வேண்டும்? எங்கே தொடங்கி எப்படி முடிக்கலாம்? எதைப் பற்றியெல்லாம் எழுதலாம்?

முதல் கட்டுரை எழுதத்தான் நாட்கள் எடுத்துக் கொண்டதே தவிர, அடுத்தடுத்த கட்டுரைகளை உடனுக்குடன் எழுதிவிட்டேன். சங்க இலக்கியம் முதலான பல நூல்களை உதவிக்கு பயன்படுத்தினேன். ஒரு மரம் குறித்து என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ, அதையெல்லாம் முடிந்தவரை சொல்லி இருப்பேன்.

மிக முக்கியமாக இந்நூலை கொரோனா வீடடைவு காலத்தில் எழுதினேன். மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் உண்டுவிட்டு, ஒருநாள் தவறாமல், ஒரு கட்டுரைக்கு ஐந்து நாட்கள் என மொத்தம் 100 நாட்கள் ஒதுக்கி, வேறு எதைப் பற்றியும் சிந்தியாமல் இந்நூலிலேயே மூழ்கி இருந்தேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 137

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=