சொல்லின்றி எதுவுமற்றவன்! – 125

ஆகாசம் நீலநெறம்’ முழுக்க முழுக்க தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள உங்கள் கிராமத்து மக்கள் நாவில் ஒலிக்கும் சொற்களால் ஆன பாடல். இதில் வரும் பல சொற்கள் முதல் தடவையாக இசைவண்டியில் ஏறியதாக எடுத்துக் கொள்ளலாமா?

(தலையை மிதமான வேகத்தில் மேலும் கீழும் அசைத்து ‘ஆமாம்’ என்றவர்)

மல்லாட்டை, செத்தை, மஞ்சம்புல் போன்ற சொற்களை சொல்லலாம். ஏற்கெனவே ‘காலம் கடந்துடுச்சு’ என்ற தனிப்பாடலை எங்கள் மண்மொழியில் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த வரிசையில் இந்த ‘ஏலேலோ பாட்டு’ தொகுதியில் பல பாடல்களை எழுதினேன். அதன் வாயிலாக அணில்காய், டிப்பிடிப்பி, வர்ணக்கோல் போன்ற இன்னும் எத்தனையோ சொற்களை இசைக்குள் கொண்டுவந்திருக்கிறேன். அவற்றில் முதன்மையான ஒன்றாக இப்பாடலை சொல்லலாம். காரணம்,

‘அடடே ஆளுங்கிறுக்கா – 

ஒண்ணால ஆனா கிறுக்கா

ராத்தூக்கம் காணல காணல

கனா மட்டும் காணுறா…

சேட ஓட்டும் கறுப்பா – 

சேதியேதும் இருக்கா

கா(த்)தோட சொன்னா

கசங்காம போவும்...

கொம்புத்தேனுக் கணக்கா

நெனப்பெல்லாம் சொட்ட

மல்லிப்பூவா சிரிப்பா

மஞ்சம்புல்லா எரிப்பா…’

என்ற வரிகளை ஒவ்வொரு தடவை கேட்கும்போதும் சட்டென எம் மண்மொழி பேசும் முகங்கள் கண்முன் வந்து போகின்றனர்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 124

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=