சொல்லின்றி எதுவுமற்றவன்! – 112
பல படிப்பினைகளை தந்தையிடம் இருந்து கற்றவர் நீங்கள். அவற்றில் மிக உயர்ந்ததாக நடைப்பழக்கத்தை பற்றி எழுதி இருப்பீர்கள். இது எல்லோருக்கும், எப்போதும் சாத்தியம்தானா?
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம். அதில் ஒரு விஷயத்தை நாம் நிச்சயம் செய்தே ஆகவேண்டும் என்று பதித்துவிட்டால் போதும், செய்துவிடலாம். அவ்வாறு பதித்ததால்தான் இப்போதும் நான் தினந்தோறும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வருகிறேன். என் தந்தையும் தனது 98 ஆவது வயதில் விடாமல் நடந்து வருகிறார்.
இன்னொரு வகையில் சொல்வதென்றால், ‘நடைமருந்து’ எத்தனை உன்னதமானது, உயிர்ப்பானது என்று உணர்ந்தவர்களால் நடக்காமல் ஒருபோதும் இருக்கமுடியாது. அவ்வாறு நடப்பவர்களை அம்மருந்து அவ்வளவு சீக்கிரத்தில் நடக்க முடியாமல் செய்தும் விடாது.
[இன்னும்]
*