புலுவாத்தரம்

பொய் பொய்யாகப் பேசுவது.
[பேச்சு வாக்கில் ‘பொய் புலுவாத்தரம்’ எனச் சேர்த்தே சொல்வர். அதோடு, அதிகமாகப் பொய் சொல்பவரை ‘புலுவாண்டி / புலுகாண்டி’ (ஆண்களை), ‘புலுவாயி’ (பெண்களை) என்றும் பட்டைப்பெயர் வைத்து அழைப்பர்.]
[புலுவாத்தரம் = புலுவாத்திரம் = புலுகாத்தரம்]
– வர வர ஒன் பொய் புலுவாத்தரத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போயினுகீது…
– அவனே செரியான புலுவாண்டி… அவனுக்கு மேல நீ இருப்ப போல.
*