ஓரம் அடித்தல்

வேட்டி, புடவை, போர்வை போன்றவற்றின் தலைப்புகளை (முனைகளை) பிரிந்துவராதவாறு மடக்கி வைத்து தையல் அடிப்பது (தைப்பது).
[ஓரம் அடித்தல் = ஓரமடித்தல்]
– போயி அண்ணங்கிட்ட ஓரம் அடிக்கத் தந்த பொடவய வாங்கினு வா…
– ஒண்ணு துப்டிய ஓரம் அடிக்கணும்… இல்லனா நூல முடிபோடணும்… ரண்டும் இல்லனா இப்டிதான் பிரிஞ்சினுவரும்.
*