சொல்லின்றி எதுவுமற்றவன்! – 094

திரும்பவும் பார்க்காத பாட்டையா, திட்டம்மா, நகலி, வக்கீலண்ணா, பத்தாள், அறிமுகன், அவளான், மன(த்)தி போன்றவர்களில் யாரை பார்க்கவேண்டும் அல்லது யாரிடம் பேசவேண்டும் என்று இப்போது நினைக்கிறீர்கள்?

அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்றாலும், நட்புறாவிடம் பழையபடி ஒரு நல்ல நண்பனாக முகநூலில் பேசவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் பற்றி நினைக்கும்போது எழும். இனி அது நடக்குமா, நடக்காதா? தெரியாது.

வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களும்; அவர்தம் முகங்களும் எதையோ ஒன்றை அவர்கள் மூலமாக நமக்கு கற்றுத் தர வருகிறார்கள்; அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் எனதிந்த இருபது முகங்களும் ஏற்கனவே என் வாழ்வில் பெரும் பாடங்களை கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஒருவேளை இனியும் கற்றுத்தர இருந்தால், அவர்கள் நிச்சயம் என்முன் வருவார்கள் என்றே தோன்றுகிறது. பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 093

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=