சொல்லின்றி எதுவுமற்றவன்! – 097
சில முகங்களின் பெயரை நேரடியாக குறிப்பிட முடியாது, சரி. ஆனால், ‘ஐயார்’ போன்ற சிலரது பெயரை குறிப்பிட்டிருக்கலாமே?
(‘ஆமாம்’ என்பது போல மேலும் கீழும் தலையாட்டிவிட்டு) குறிப்பிட்டு இருக்கலாம்தான். என்றாலும், இந்த நூலை எழுதத் தொடங்குவதற்கு முன்பே இதில் வரப்போகும் எந்த முகங்கள் பெயரையும் நேரடியாக குறிப்பிடக் கூடாது என முடிவெடுத்ததால் குறிப்பிடவில்லை.
அதற்கென பெரிதாக காரணம் எல்லாம் எதுவும் இல்லை. அதேநேரம் இதில் வரும் முகங்களை கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை சிரமம் கிடையாது. உதாரணத்துக்கு சொல்கிறேனே. நீங்கள் வாசித்த நூலகனைத் தேடி கன்னிமாரா நூலகத்துக்குப் போனால் மிக எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
ஸ்பென்சர் பிளாசாவுக்குப் போனால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் மோனனை பார்த்துவிடலாம். ஆயிரம் விளக்கு பகுதியின் தெருக்களில் சுற்றித் திரிந்து விசாரித்தால் ஏகாந்தரையும், எங்களூரிலும் எங்கள் பக்கத்து ஊரிலும் தேடினால் வக்கீலண்ணனையும் கண்டுவிடலாம்.
நேரடிப் பெயரைத் தாண்டி, அவர்களது முகத்தை படிக்கும் வாசகர் மனத்துள் பதிய வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் அவர்களது முகத்தை பிரதிபலிக்கக்கூடிய பெயரை ஒவ்வொருவருக்கும் வைத்தேன். அதைவிட இது ஒரு படி மேலென இப்போது யோசிக்கையிலும் தோன்றுகிறது.
[இன்னும்]
*