சொல்லின்றி எதுவுமற்றவன்! – 081

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தந்த முன்னுரை பற்றி சொல்லுங்கள்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயா நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளுமை. எனது ஆசிரியர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் என் தந்தைக்கு நிகரானவர். எப்படியாவது அவரிடம் இந்த நூலுக்கு முன்னுரை வாங்கவேண்டும் என நினைத்து, ஒருநாள் மாலை நகர்பேசியில் அழைத்துக் கேட்டேன்.

நான் சொன்ன விஷயம் அதாவது, என் தந்தையின் 95 ஆவது பிறந்தநாளுக்குப் பரிசாக அவர் பற்றி எழுதிய அந்நூலை தரப்போவது அவருக்குப் பிடித்திருந்தது. அதனால் மறுப்பு சொல்லாமல், ‘அனுப்பி வையுங்கள். பிடித்திருந்தால் நிச்சயம் தருகிறேன்’ என்றார்.

அடுத்த நிமிடமே கோவையில் இருக்கும் செந்தில் அண்ணனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் ஒரு மணி நேரத்துக்குள் பிரிண்ட் அவுட் எடுத்துப் போய் நேரில் தந்துவிட்டு வந்தார்.

உடனே வாசித்துவிட்டு அழைத்தவர், ‘தனக்கு நூல் பிடித்திருப்பதாகவும், தான் முன்னுரை தருவதாகவும்’ சொல்லி, ‘நேரில் வாருங்கள். மற்றதை பேசுவோம்’ என்றார். போனேன்.

முன்னுரை எழுதிய தாள்களை என் கையில் தந்தவர், நூல் குறித்து பல விஷயங்களை பேசினார். வெளியில் வந்ததும் நேராக ஒரு தேநீர்க் கடையில் போய் உட்கார்ந்து, முழுமையாக வாசித்துவிட்டு அத்தனை மகிழ்ந்தேன். இப்படி ஒரு முன்னுரை அதுவும், என் ஆசிரியரிடம் இருந்து வரும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 080

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=