சொல்லின்றி எதுவுமற்றவன்! – 064
முன்பெல்லாம் ஓர் ஆல்பம் என்றால் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். ஆனால் அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு பாடலுக்கு வந்து நிற்கிறது. இந்த சூழலில் பொதிகை தொலைக்காட்சிக்காக நீங்கள் எழுதிய ‘சுகமான சுதந்திரம்’ ஆல்பம் ஐந்து பாடல்கள் கொண்டது. அதைப் பற்றி சொல்லுங்கள்…
‘சுகமான சுதந்திரம்’ ஆல்பம் வாய்ப்பு எனது நண்பர் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை அவர்களை தேடி வந்தது. உடனே அவர் என்னை அழைத்து, ‘இப்படி ஓர் ஆல்பம் நாம் செய்யவேண்டும். நேரம் மிகக் குறைவாகவே இருக்கிறது’ என்றார்.
ஒரே நாளில் எழுதிய நான்கு பாடல்களோடு, முன்னமே எழுதிய ஒரு பாடலை திருத்தி சேர்த்து ஐந்து பாடல்களாக அவருக்கு அனுப்பி வைத்தேன். அது பொதிகை தொலைக்காட்சிக்கு சென்று ஒப்புதல் பெற்று வந்தபின் பதிவானது.
நம் இந்திய நாடு குறித்து, அதிலும் இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து எழுதியது புது அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு பாட்டிலும் பல புதிய விஷயங்களை செய்திருப்பேன்.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 063