சொல்லின்றி எதுவுமற்றவன்! – 056
‘ஓ, மக்களே’ பாடல் குறித்து இன்னொரு கேள்வி. இந்தப் பாடலில் நீங்கள் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சொன்னதாகத் தெரிகிறதே…?
இந்தப் பாடலை பொறுத்தவரையில் அவர் ஒரு குறியீடு மட்டும்தான். அவரைப்போல் பல்துறை சார்ந்த தன்னலமற்ற, மக்கள் மீது பெரும் அன்பும், சமூகத்தின் மேல் அதீத அக்கறையும், அதன் முன்னேற்றத்தில் மகிழ்வும் கொண்டவர்களை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன்.
இதையெல்லாம் எத்தனைபேர் கேட்டார்கள்; கவனித்தார்கள்; பொருட்படுத்தினார்கள் என்று தெரியாது. ஆனால், மிகச் சிலருக்குள்ளேனும் அது நல்மாற்றத்தை விதைத்திருக்கும்; விதைக்கும் என நம்பினேன்; நம்புகிறேன். பார்ப்போம்!
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 055