சொல்லின்றி எதுவுமற்றவன்! – 048

உங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இதுபோன்று மெனக்கிட்டு பாடல் வரிகளில் ஒரு விஷயத்தை செய்து, கேட்பவர்களில் மிகுதியானவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போகையில் எழுதிய உங்களுக்கு அது வருத்தத்தை தராதா?

(‘இல்லை’ என்பதுபோல் வேகமாகத் தலையாட்டிவிட்டு) தரவே தராது (என்கிறார்).

எந்தப் படைப்பாளனும் தன் படைப்பில் செய்யும் ஒரு விஷயம் உடனே எல்லோராலும் கண்டுகொள்ளப்படவேண்டும் என்று நினைக்கமாட்டான். மாறாக, அது மிகச் சிலராலாவது கண்டுகொள்ளப்படும் என்றும், அவ்வாறு கண்டுகொள்ளப்படாமல் போனாலும் அதனால் ஒன்றும் வருத்தம் கொள்ளமாட்டான்.

எனினும் அவனுக்குள், ‘இன்றில்லை என்றாலும், வரும் காலங்களில் அது பலரால் கண்டுகொள்ளப்படும்; கொண்டாடப்படும்’ என்ற நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கைதான் அவனை இதுபோன்ற முயற்சிகளையும், மெனக்கிடல்களையும் தொடர்ந்து மேற்கொள்ளச் செய்கின்றன; தூண்டுகின்றன.

ஒரு படைப்பு வாசகனை மனத்தில் கொண்டு அவனுக்காகப் படைக்கப்படுமாயின் அது ஒருவித போலிப் படைப்பாகவே இருக்கும் என்பது என் எண்ணம். அதேபோல் படைப்பு வாசகனுக்காக எழுதப்பட்டாலும், அப்படைப்புக்கு உண்மையாக இருக்கையில் மட்டுமே அது உயிர்ப்பாகவும், நிஜமாகவும் இருக்கும். இதை மனத்தில் நிறுத்திக்கொண்டுதான் என் ஒவ்வொரு படைப்பையும் இங்கே நிகழ்த்தி வருகிறேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 047

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=