சூடுகொட்டை

தரையில் தேய்த்து உடம்பில் வைத்தால் சுடக்கூடிய கொட்டை (விதை) வகை.
[கொடியில் காய்ப்பது. சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் தேய்த்துச் சூடு வைத்து விளையாடுவது. மருந்தாகவும் பயன்படுவது.]
[சூடுகொட்டை = சூட்டுக்கொட்டை = சூட்டாங்கொட்டை]
– சூடுகொட்ட வச்சி வெளாடுறன்னு… யாருமேலனா தேச்சிசண்டகிண்ட வாங்கியாராத.
– கையில கீற சூட்டுக்கொட்டைய மொத புடுங்கினு வுடணும்… அப்பதான் ஒரெடத்துல ஒக்காருவ.
*