சொல்லின்றி எதுவுமற்றவன்! – 035

உங்கள் முதல் தனிப்பாடல் தொப்புள்கொடி வெளியானது 2016இல். ஆனால் உங்களுக்குள்ளிருந்து எழுத்து பாடலாக வெளிப்பட்டது முதுகலை இரண்டாமாண்டு படிக்கையில். அதாவது, 2011 இறுதியில். ஏன் இந்தக் காலத்தாமதம் அல்லது இடைவெளி?

நல்ல கேள்வி.

நான் முன்னமே சொன்னதுபோல் எனக்குள்ளிருந்து எழுத்து வெளிப்பட்டதும், அதுதான் என் வாழ்வாக இருக்கப்போகிறது என கண்டுகொண்டதும், பலநூறு புத்தகங்களையும், பாடல்களையும் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன்; கேட்க ஆரம்பித்தேன்.

கூடவே, பாடல் தொடங்கி, கட்டுரை வரைக்கும் புதுப்புது வடிவங்களில், கூறுமுறைகளில் எழுதிப் பழகினேன். அதன் மூலமாக என்னையும், என் எழுத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டு, ஒருகட்டத்தில் ‘போதும்… இப்போ நம்மளால நல்ல தரமானப் பாடலயும், புத்தகத்தயும் எழுதமுடியும்’ என்று தோன்றியதும், அதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.

‘சும்மா நானும் பாட்டு எழுத வந்துட்டன். புத்தகம் போடப் போறன்’ என்பதாக இல்லாமல், எனதிந்த வளர்ச்சிக்கு இக்காலம் அவசியம் தேவையாக இருந்தது. அதனால்தான் எடுத்துக்கொண்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 034

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=