சீட்டு கட்டுதல்

ஊர் பஞ்சாயத்தில் ஒருவர் மீது புகார் சொல்லி நிர்ணயிக்கப்பட்ட சிறு தொகையை கட்டுவது.
[அவ்வாறு ஒருவர் தகுந்த காரணத்தோடு சீட்டு கட்டினால் அவரது புகாரை ஊர் பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டு, தேதி குறித்து சம்மந்தப்பட்ட நபரை வரவழைத்து கூடி விசாரித்து தீர்ப்பது வழக்கம்.]
[சீட்டு கட்டுதல்]
– மோட்டுவூட்டு ஏழுமலய பள்ளத்து தெரு குப்பன் அடிச்சிட்டான்னு சீட்டு கட்டிகீறான்… இன்னிக்கி ராத்திரி பஞ்சாயத்து.
– வர வர எதெதுக்குதான் சீட்டு கட்றதுன்னு வெவஸ்தயே இல்லாமப் போச்சில்ல…
*