சொல்லின்றி எதுவுமற்றவன்! – 030

விகடனில் நீங்கள் செய்த மாற்றம், அல்லது உங்களால் நிகழ்ந்தவைப் பற்றி சொல்லுங்கள்…

விகடன் மாணவப் பத்திரிகையாளராக ஓராண்டு. நிருபராகவும், தலைமை நிருபராகவும் மூன்றரை ஆண்டுகள் என மொத்தமே நான்கரை ஆண்டுகள்தான் விகடனில் இருந்தேன். இக்காலங்களில் அவள் விகடனில் அதுவரை இல்லாத பல புதிய விஷயங்களைப் பற்றி எழுதத் தொடங்கினேன். உதாரணமாக, ஆனந்த விகடன், ஜூனியர் விகடனில் வருவது போல பெரிய பெரிய சிறப்புக் கட்டுரைகளை அதிலும் குறிப்பாக, சமூகம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து மிக விரிவாகத் தொடர்ந்து எழுதினேன்.

பின் அவள் விகடன் இதழை கல்லூரி மாணவிகள் மத்தியில் கொண்டுசெல்ல ‘செல்நெட்’ என்னும் தொழில்நுட்ப நிகழ்ச்சியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள பல மகளிர் கல்லூரிகளில் சென்று தனியொருவனாக வெற்றிகரமாக நடத்தினேன் (நான் வெளியே வந்தபிறகு இந்நிகழ்ச்சி நடக்காமல் போனது வேறு கதை).

நிர்வாக ரீதியாக என்றால், விகடன் பணியாளர்களில் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு இவ்வளவு என Petrol Allowance தருவது போல், வாகனம் இல்லாத என்போன்றவர்களுக்கு வந்துபோக ஏன் மாதாந்திர பஸ் பாஸ், மின்சார ரயிலில் சீசன் டிக்கெட் வாங்க வழிவகை செய்யக்கூடாது? எனக் கேட்டு, அது நடைமுறைக்கு வரக் காரணமாக இருந்தேன். இப்படி இன்னும் கூட சிலவற்றைச் சொல்லலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 025

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 026

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 027

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 028

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 029

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=