சொல்லின்றி எதுவுமற்றவன்! – 026
நீங்கள் தேர்வான ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’ பற்றியும், அதில் நீங்கள் ‘தலைசிறந்த மாணவ நிருபர் விருது’ பெற்ற தருணத்தையும் விவரிக்க முடியுமா?
கல்லூரி மாணவர்களை படிக்கும் காலத்திலேயே பத்திரிகை பணிகளில் ஈடுபட வைத்து, அதற்கானப் பயிற்சியும் வழங்கி, பின்னாளில் அவர்களில் சிறந்தவர்களை பணிக்கு எடுத்துக்கொள்ள தொடங்கப்பட்டதுதான் இந்த மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்.
ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதையும் எழுதாததால் திட்டத்திலிருந்து நீக்கும் நிலைக்குப் தள்ளப்பட்டு, கடைசி ஆறு மாதத்தில் மட்டும் 150-க்கும் அதிகமானக் கட்டுரைகள் (வெளியானது மட்டும்) எழுதி, 2011 – 12 ஆம் ஆண்டுக்கான ‘தலைசிறந்த மாணவ நிருபர் விருது’ பெற்றேன்.
அந்தத் தருணம் இப்போது நினைத்தாலும் அப்படியே கண்முன்னால் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆறு மாத காலம் சரிவர ஓய்வின்றி, நேரத்திற்கு உணவு கூட உண்ணாமல் பார்ப்பதையெல்லாம் கட்டுரையாக்கி, அலுவலகம் செல்லாமலேயே அங்கிருந்தவர்களை என்பற்றி பேச வைத்து, நினைத்தது போல் முதலிடம் வந்து ‘தலைசிறந்த மாணவ நிருபர் விருது’ பெற்றது, என் நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் கிடைத்த முதல் அங்கீகாரம். எப்போது நினைத்தாலும் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய தருணங்களில் இது முதன்மையானது; முக்கியமானது.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023