வண்டிசத்தம்

வண்டிக் கூலி.
[(விவசாய மற்றும் இதர வேலைகளுக்கு) மாட்டு வண்டி, டயர் வண்டி, டிராக்டர், லாரி போன்றவற்றுக்குத் தரும் கூலித்தொகை.]
[வண்டிசத்தம்]
– எப்டி கணக்கு போட்டாலும்… வண்டிசத்தம் மட்டும் தலக்கிமேல வந்து நின்னுடுது.
– எதுத்த வூட்டுக்காரன் வர வர அநியாய்த்துக்கு வண்டிசத்தம் கேக்குறான், மாமா.
*