சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007
நீங்கள் பிறந்து வளர்ந்த உங்கள் கிராமம் பற்றியும், அதன் அருகில் ஓடும் தென்பெண்ணை ஆறு பற்றியும் சொல்லுங்கள்…
எங்கள் கிராமம் ஒருபக்கம் பச்சைப் பசேலென இருக்கும் நஞ்சை நிலங்களாலும், இன்னொரு பக்கம் சற்று வறட்சியான புஞ்சை நிலங்களாலும் ஆன அழகிய சின்னஞ் சிறு கிராமம். விதவிதமான மரங்கள், செடி கொடி புல் பூண்டுகள், மலைகள், ஏரி, குளம், குட்டை, கிணறு, ஆறு, கால்வாய், ஓடை என எத்தனை எத்தனையோ இயற்கை வளங்களால் நிறைந்தது. இன்னதுதான் என்று சொல்லி முடிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொன்றோடும் பின்னிப் பிணைந்தது என் வாழ்க்கை.
அதிலும் எங்களூர் அருகில் ஓடும் தென்பெண்ணை ஆறு, சொல்லச் சொல்லத் திகட்டாத அனுபவங்களை சிறுவயது முதலே வாரி வழங்கியது. ஐயாவோடும், அம்மாவோடும், அக்காவோடும், அண்ணன்களோடும், நண்பர்களோடும் அதில் குளிக்கப் போவது தொடங்கி, என் வயது சிறார்களுடன் கூடிக்கொண்டு சென்று வகைவகையான மீன்களைப் பிடித்துச் சுட்டுத் தின்றது வரைக்கும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவகையில் இயற்கை மீதான ஆழ்ந்த நேசத்தையும், புரிதலையும் எனக்குள் விதைத்ததில் இந்தத் தென்பெண்ணை ஆறுக்கு பெரும் பங்கு உண்டென்று பெருமையாகச் சொல்வேன்.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004