சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
அப்போ, ஒரு நூல்கூட வாசிக்காமலேயே எழுத்துதான் உங்கள் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டீர்கள். அப்படித்தானே?
ஆமாம். நான் புத்தகங்கள் அதாவது, பாடபுத்தகங்கள் தாண்டி எதையும் அதுவரை வாசித்ததில்லை என்றாலும், அத்தனை எளிதில் யாருக்கும் கிடைத்திடாத பல அரிய அனுபவங்களை சிறுவயது முதலே கைகொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு அது ஒரு குறையாகத் தோன்றவில்லை.
அதேநேரம் அந்தச் சம்பவத்தின்போது அருள்தந்தை அவர்கள் சொன்ன, ‘எழுத்து எல்லோருக்கும் எளிதா வரக்கூடியதில்ல. அதுலயும் பாடல் எழுதுறது எளிய விஷயம் கிடையாது. எத்தனையோ பேர் முயற்சி செய்து பார்த்தும் வராத ஒரு விஷயம், எந்தவொரு முயற்சியும் செய்யாம உனக்குள்ள இருந்து வந்திருக்குன்னா, சம்திங் ஸ்பெஷல். அதனால இத நீ எளிதா எடுத்துக்காம… உனக்கு முன்னாடி இருந்தவங்கலாம் என்னென்ன செய்திருக்காங்கன்னு பாரு. ஒருவேள நாளைக்கு இதுவே உன் வாழ்க்கையா கூட மாறலாம்’ என்ற வார்த்தைகள் தந்த தூண்டுதலால், அதைத் தொடர்ந்து பாடல்களையும், நூல்களையும் நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு ஒரு நூல்; நூறு பாடல்கள் எல்லாம் வாசித்த; கேட்ட காலம் அது.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002