‘தாவர சங்கமம்’ தொடர்!

நண்பர்களுக்கு ஒரு மகிழ்வானச் செய்தி…

பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் சமூக இலக்கிய பல்சுவை மாத இதழான ‘கொலுசு’வில் ‘தாவர சங்கமம்’ என்ற தலைப்பில் ஓர் இலக்கியத் தொடர் எழுதுகிறேன்.

இது எனது முதல் இலக்கியத் தொடர் (அச்சு இதழில்). இம்மாதம் முதல் வெளியாகும் இத்தொடரின் ஒவ்வோர் அத்தியாயமும் வாசிப்போர்க்கு நிச்சயம் புதியதொரு திறப்பை அளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதோடு, என் எழுத்துப் பயணத்தில் இந்தத் தொடர் மிக முக்கியப் படிக்கல்லாக இருக்கும் என்றும் எண்ணுகிறேன்.

வாய்ப்புள்ளோர் வாசித்துவிட்டு தங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்தால் பெரிதும் மகிழ்வேன்.

மிக்க அன்புடன்,

வடிவரசு.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=